36 மணிநேரத்தில் 750 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை விற்று தீர்த்த அமேசான் 

 

36 மணிநேரத்தில் 750 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட்போனை விற்று தீர்த்த அமேசான் 

அமேசான் நிறுவனம், 36 மணி நேரத்தில், 750 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

 இந்திய ஆன்லைன் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதில் கடும் போட்டி போடுகின்றன. இரண்டு நிறுவனங்களும் போட்டிக்கொண்டு பண்டிகை கால ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Amazon

GREAT INDIAN FESTIVAL என்று தள்ளுபடி விற்பனையை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வரை இந்த தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதன்மூலம் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும்  அமேசான் நிறுவனம் 750 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.