35 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு; விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்

 

35 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு; விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு, இன்றிலிருந்து தனிமைச்சிறையில் இருந்து விடுபட்டிருக்கிறான். பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் கம்போடியாவிற்கு பறந்திருக்கும் காவன், இனி கூட்டமாக மகிழ்வாக இருப்பான் என்பதாலம் உலகம் முழுவதிலும் இருந்து அவனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

காவனின் இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த செர் எனும் அமெரிக்க பாடகருக்கும், விலங்குகள் ஆர்வலர்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தி இருக்கிறார்.

35 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு; விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்

பாகிஸ்தானில் யானைகளே இல்லை என்பதால் அந்த நாட்டுக்கு 1985ம் ஆண்டு ஒரு வயதுடைய காவன் எனும் யானையை பரிசாக வழங்கியது இலங்கை அரசு. பின்னர் அந்த யானைக்கு துணையாக சஹோலி எனும் பெண் யானையையும் 1990ல் வழங்கியது இலங்கை.

யானைகளின் வெப்பநிலைக்கும் பாகிஸ்தானின் வெப்பநிலைக்கும் ஒத்துப்போகவில்லை. புதிய அந்த வெப்பம் தாங்க முடியாமல் கடந்த 2012ல் சஹோலி உயிரிழந்தது. சஹோலியின் பிரிவினாலும் அதிக வெப்பநிலையினாலும் வாடி வந்தான் காவன்.

35 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு; விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்

ஒரே ஒரு ஆள், அதுவும் அளவுக்கு அதிகமான வெப்பநிலை என்கிற காரணத்திலால், நல்ல கவனிப்பு இருந்தும் காவனின் மனநிலை மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சாதுவாக இருந்த காவன் 2015ம் ஆண்டில் மூர்க்கத்தனமாக மாறியது. இதையடுத்து காவனை சங்கிலியால் கட்டி வைத்தனர்.

ஒன்றுமே இயலாத நேரத்தில் சுவற்றி முட்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லுவோம். அப்படித்தான் காவனும் தனிமை விரக்தியில் சுவற்றை முட்டிக்கொண்டு நின்றது. இந்த போட்டோ வெளியாகி, உலகின் மிகவும் தனிமையான, கவலையான யானை என்று உலகமே கவலை தெரிவித்தது. மேலும், அந்த காவனுக்கு விடுதலை கொடுக்க அழுத்தம் கொடுத்து வந்தனர். அதில் முக்கியமானவர் அமெரிக்க பாடகர் செர்.

35 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு; விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்
Pakistani wildlife workers and experts from the international animal welfare organization Four Paws, arrange an elephant named Kaavan into a crate before he is transported to a sanctuary in Cambodia, at the Marghazar Zoo in Islamabad, Pakistan, Sunday, Nov. 29, 2020. Kavaan, the world’s loneliest elephant, became a cause celebre in part because America’s iconic singer and actress Cher joined the battle to save him from his desperate conditions at the zoo. (AP Photo/Anjum Naveed)

பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக் அவழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரப்படி காவனை கம்போடியா சரணாலாயத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விமானத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கூண்டு மூலமாக பாகிஸ்தானில் இருந்து கம்போடியான் சரணாலயத்திற்கு சென்றான் காவன்.

முன்னதாக, 35 வருட போராட்டத்திற்கு பின்னர் புதுவாழ்கை தொடங்கப்போகும் காவனுக்கு ஆடல், பாடலுடன் பிரிவு உபச்சார நிகழ்வு நடத்தினர் சமூக ஆர்வலர்களும், விலங்குகள் ஆர்வலர்களும்.