• April
    07
    Tuesday

Main Area

Main



ஜப்பானில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு!

கப்பல்
கப்பல்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதுவரை கொரோனா வைரஸால் 1662 பேர் உயிரிழந்துள்ளனர்.  68ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜப்பான் கப்பல்
இந்நிலையில் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த 2 இந்தியர்கள் உட்பட 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  பயணித்த 138 இந்தியர்கள் உள்பட 3,711 பயணிகளில் இதுவரை 1,219 பேருக்கு கொரோனா சோதனை முடிந்துள்ளது.  கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்து அதன்பிறகு அங்கிருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஜப்பான் அரசு திணறிவருகிறது. 

 

2018 TopTamilNews. All rights reserved.