Home அரசியல் 3,500 கோடிகள் முதலீடு! முதல்வரைச் சந்தித்த துபாய் பிரதிநிதிகள்!

3,500 கோடிகள் முதலீடு! முதல்வரைச் சந்தித்த துபாய் பிரதிநிதிகள்!

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு அழைப்பு விடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றிருந்தார். அப்போது துபாயில் சுமார் ரூ.4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் தொழில் துவங்குவதற்காக போடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

edapadi

தமிழகத்தில் என்ன தொழில் துவங்கலாம், முதலீடு தொகை எவ்வளவு, வேலை வாய்ப்புகள் எத்தனைப் பேருக்கு என்று இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வருடனான இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய துபாய் முதலீட்டாளர்கள், பயோடீசல், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தனர். அடுத்த 3 மாதங்களில் தொழில் தொடங்குவதற்கான இடங்களைக் கண்டறிந்து 6 மாத காலத்திற்குள் தமிழகத்தில் தொழில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘சசிகலா உணவருந்தினார்; எழுந்து நடந்தார்’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் மனோஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,...

ஶ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.02 கோடி வசூல்

திருச்சி திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் பணம், 179 கிராம் தங்கம் மற்றும் 849 கிராம்...

’மகிழ்ச்சியான முதியவர்’ ட்ரம்பைக் கலாய்த்து கிரேட்டா துன்பர்க் ட்விட்!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி ஏற்றுவிட்டார். பெரும் வன்முறை ஏற்படும், ட்ரம்ப் ஏதேனும் கடைசி நேரத்தில் சதிச் செயல் செய்யக்கூடும் என்றெல்லாம் அச்சப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்...

திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சியா? – கே.எஸ்.அழகிரி விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக நடத்தி வந்தார். தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், காலில் சிறு அறுவை...
Do NOT follow this link or you will be banned from the site!