“வேலை கொடு இல்லேன்னா உயிரை விடு” -வாரிசு வேலைக்காக தந்தைக்கு நேர்ந்த நிலை

 

“வேலை கொடு இல்லேன்னா உயிரை விடு” -வாரிசு வேலைக்காக தந்தைக்கு நேர்ந்த நிலை

ஒரு தந்தையின் வாரிசு வேலைக்காக அவரின் மகனே அவரை கொன்ற சம்பவம் பல பெற்றோர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

ஜார்க்கண்டின் ராம்கரில் சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (சி.சி.எல்)என்ற பொதுத்துறை நிறுவனத்தில் தலைமை பாதுகாப்பு காவலராக 55 வயதான  கிருஷ்ணா ராம் என்பவர் பணி புரிந்தார்.அவருக்கு 35 வயதில் ஒரு மகன் இருக்கிறார் .படித்து பட்டதாரியான அவருக்கு வேலையில்லை  .அதனால் பல இடங்களில்  வேலை தேடியும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்ந்து வந்தார் ..மேலும் அவரின் தந்தை உள்பட உறவினர்கள்   நண்பர்கள் அனைவரும் அவரை வேலையில்லாததால் கேலியும் கிண்டலும் செய்துள்ளார்கள் .

இதனால் அவரின் தந்தை பார்க்கும் நிறுவனத்தில் பணியிலிருக்கும்போது ஒரு ஊழியர் இறந்து விட்டால் அவரின் வாரிசுக்கு வேலையுண்டு என்று ஒரு சட்டம் உள்ளது .

இந்த சட்டத்தையறிந்த அவரின் மகன் அவரை கொன்று விட்டால்  அவரின் வாரிசான தனக்கு வேலை கிடைக்கும் என்று ஒரு கணக்கு போட்டார் .அதனால் கடந்த புதன்கிழமை இரவு பர்ககானாவில் உள்ள அவரின் வீட்டில்  தந்தையின் கழுத்தை அறுத்து அவரின் மகன் கொலை செய்தார் .அதன் பின்னர் ராமின் கொலை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து  வந்து விசாரணை மேற்கொண்டார்கள் 

அப்போது இந்த கொலை குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிறிய ஹம்மர் கத்தி மற்றும் கொல்லப்பட்ட நபரின் மொபைல் போனை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும் போலீஸ் விசாரணையின் போது ராமின் மூத்த மகன் சி.சி.எல் இல்  வேலை பெறுவதற்காக தனது தந்தையை கொன்றதாக  வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் கூறினர். 

“வேலை கொடு இல்லேன்னா உயிரை விடு” -வாரிசு வேலைக்காக தந்தைக்கு நேர்ந்த நிலை