பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை!

 

பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முருங்கவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் சொந்தமாக மினி பேருந்து நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சுந்தரராஜன் சில நாட்களுக்கு முன்பு தொழில் சம்பந்தமாக சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை முருங்கவிளை திரும்பிய சுந்தர்ராஜன், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை!

அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தால் அதிர்ச்சியடைந்த அவர், அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, மர்மநபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும், அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து விட்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.