ராமநாதபுரம் மாவட்டம் கடற்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா உறுதி!

 

ராமநாதபுரம் மாவட்டம் கடற்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையைக் கையாண்டு வருகின்றன. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனிடையே பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள், மருத்துவர்கள் எனப் பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புள்ளி பகுதியில் இருக்கும் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடற்படை வீரர்கள் 35 பேருக்கு கொரோனா உறுதி!

வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஐ.என்.எஸ் பருந்து கடற்படைத் தளத்தில் பணியாற்றும் மற்றவர்களுக்கும் கொரோனா பரவாமல் தடுக்க கடற்படை தளம் சீல் வைக்கப்பட உள்ளது. அங்கிருந்த 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 35 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கடற்படை வீரர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியானதால், ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.