இந்திய- சீன ராணுவ தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு – அமெரிக்க உளவுத்துறை தகவல்

 

இந்திய- சீன ராணுவ தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு – அமெரிக்க உளவுத்துறை தகவல்

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய- சீன ராணுவ தாக்குதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழப்பு – அமெரிக்க உளவுத்துறை தகவல்

திடீரென சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் முதலில் 43 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 35 வீரர்களே உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதில் சீன உயர் அதிகாரியும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடந்த உடன் வீரர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் லடாக் தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.