35 வயசுக்குள் இருந்தால் தான் இளைஞரணி உறுப்பினர்… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

 

35 வயசுக்குள் இருந்தால் தான் இளைஞரணி உறுப்பினர்… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க இளைஞரணி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,தி.மு.க இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆரம்பிக்கப்பட்ட போது அண்ணா அவர்களுக்கு வயது 40, கலைஞருக்கு 25, இனமான பேராசிரியருக்கு 26 வயது. இவர்களின் வழிவந்த நம் தலைவர் தன்னை கழகத்தில் ஈடுபடுத்திக் கொண்டு களத்தில் இறங்கி உழைக்கத் தொடங்கும் போது அவரும் இளைஞரே.

தி.மு.க இளைஞரணி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,தி.மு.க இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆரம்பிக்கப்பட்ட போது அண்ணா அவர்களுக்கு வயது 40, கலைஞருக்கு 25, இனமான பேராசிரியருக்கு 26 வயது. இவர்களின் வழிவந்த நம் தலைவர் தன்னை கழகத்தில் ஈடுபடுத்திக் கொண்டு களத்தில் இறங்கி உழைக்கத் தொடங்கும் போது அவரும் இளைஞரே. இப்படியான இளைஞர்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட தமிழகமும் இன்று மிக ஆபத்தான சூழலை எதிர்நோக்கியுள்ளது. இந்த எடப்பாடி அரசு அமைந்த போது நிகழ்ந்த கூத்து தொடங்கி, தற்போதைய அமைச்சர்களின் அமெரிக்கப் பயணம் வரை ஒன்றன் பின் ஒன்றாக நினைவு கூர்ந்தாலே, இது மக்களுக்கான அரசாக செயல்படவே முடியாது என்பதை உணர்வீர்கள். 

dmk youth wing

எடப்பாடி அரசின் இந்த கூத்துகளைச் சிரித்து விட்டுக் கடந்து விட நம்மால் முடியவில்லை. ஏனென்றால் இந்த காமெடி அரசு, தமிழகத்தைப் பலநூற்றாண்டுகளுக்கு பின்னிழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இப்படி, மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், திட்டங்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தி ஜனநாயகத்தைக் காக்க வேண்டியது நம் இளைஞர்கள் ஒவ்வொருவரின் கடமை. இந்த அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக நாம் மாறவேண்டும். அந்தப் பணியைத் தான் தி.மு.க இளைஞர் அணி செய்து வருகிறது. இந்தப் பணியை விரிவுபடுத்த, விரைவுபடுத்த தி.மு.க இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம்.

stalin and udhayanidhi

செப்டம்பர் 14 தொடங்கி, நவம்பர் 14 வரையிலான இரண்டு மாத காலத்தில் தமிழகம் – புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம்களை நடத்தி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களை நம் இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம். தங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினர்களாக இணையலாம். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்காதவர்கள் மட்டும் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினராகச் சேரலாம். இளைஞர் அணியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களும் தங்களைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அவர்களும் தங்களின் உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கும் போது மேற்சொன்ன அடையாள சான்றுகளை அளிப்பது அவசியம்’ என்று கூறியிருக்கிறார்.