35-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ

 

35-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ

பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

லிஸ்பன்: பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 1985-ஆம் ஆண்டு பிறந்த ரொனால்டோ தேசிய கால்பந்து அணியிலும், ஜுவென்டஸ் கால்பந்து க்ளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா என்னும் சிறிய தீவில் தன்னுடைய பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக ரொனால்டோ பிறந்தார். ஏழ்மையின் காரணமாக ரொனால்டோவைக் கருவிலேயே கலைக்க அவருடைய தாய் நினைத்திருக்கிறார். ஆனால் பின்பு மனம் மாறி ரொனால்டோவை பெற்றெடுத்தார்.

ttn

ரொனால்டோவுக்கு 4 வயது ஆனபோது அவரது தந்தை கால்பந்து விளையாட கற்றுக் கொடுத்தார். அந்த விளையாட்டு ரொனால்டோவுக்கு மிகவும் பிடித்துப் போக, கால்பந்து விளையாட்டில் கில்லி ஆகி 8 வயதிலேயே உள்ளூர் கால்பந்து கிளப் அணிக்காக ரொனால்டோ ஆடத் தொடங்கி விட்டார். ரொனால்டோவின் வேகமே அவர் பின்னாளில் மிகப்பெரிய கால்பந்து நட்சத்திரமாக உருவாகப் போவதை சுட்டிக் காட்டியது.

ttn

காலப்போக்கில் கால்பந்து பிரபலமாக உருவெடுத்த ரொனால்டோ தன் கடின உழைப்பால் ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக U-16 அணி, U-17 அணி, U-18 அணி என முன்னேறி, சீனியர் அணியிலும் இடம்பெற்றார். மேலும் ஒரே சீஸனில் அனைத்து அணிகளுக்கும் தகுதிபெற்ற ஒரே வீரர், ரொனால்டோ மட்டுமே ஆவார்.

ttn

2003-ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 12.3 மில்லியன் யூரோ சம்பளமாக முடிவு செய்யப்பட்டு ரொனால்டோஒப்பந்தம் செய்யப்பட்டபோது அவருக்கு வயது 18 ஆகும். அந்த அணியில் முன்னதாக கால்பந்து ஜாம்பவான்களக விளங்கிய கன்டோனா மற்றும் டேவிட் பெக்கம் அணிந்த ஜெர்ஸி நம்பர் 7, ரொனால்டோவுக்கு தரப்பட்டது. இது விமர்சனத்திற்கு உள்ளாக, அந்த ஜெர்ஸியை அணிவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதை அசாத்திய கால்பந்து திறமை மூலம் நிரூபித்துக் காட்டினார். அந்த ஆண்டு 2003 FA இறுதிப் போட்டியில் யுனைடெட் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ttn

2009-ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் கால்பந்து க்ளப் அணிக்காக 86 மில்லியன் யூரோ கொடுத்து ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ஒரு வீரருக்காக கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை அதுவேயாகும். மேலும் 2014-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பத்தாவது முறையாக வெல்ல வேண்டும் என்ற மாட்ரிட் அணி ரசிகர்களின் 12 ஆண்டு கனவை நிறைவேற்றிய பெருமை ரொனால்டோவையே சேரும். அந்தத் தொடரில் மொத்தம் 17 கோல்கள் அடித்து அவர் அசத்தினார்.

ttn

இரண்டு கிளப் அணிகளுக்காக கிளப் உலகக்கோப்பை மற்றும் சாம்பியனஸ் லீக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் ரொனால்டோ மட்டுமே ஆவார். 2016-ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் தேசிய கால்பந்து அணிக்காக யூரோ கோப்பையையும் பெற்றுத் தந்து அந்நாட்டு மக்களின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து ரசிகர்களின் ரியல் ஹீரோவாக மின்னி வருகிறார்!