35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை பார்த்ததில்லை ! போலீஸ் தகவல்

 

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை பார்த்ததில்லை !  போலீஸ் தகவல்

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை இதுவரை பார்த்ததில்லை என சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை இதுவரை பார்த்ததில்லை என சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

chennaisecuirtypolice

அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை காவல்துறை ஒருமாதம் பயிற்சி மேற்கொண்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் கண்காணித்த காவல்துறை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்தனர். சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 110-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். சீன அதிபர் செல்லும்  அனைத்து இடங்களிலும் டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் இணை ஆணையர் சுதாகர் கூறும்போது தனக்கு தெரிந்தவரை இவ்வளவு தூரம் எந்த அதிபரும் காரில் பயணம் செய்ததில்லை என தெரிவித்தார்.