35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை சென்னையை அடைந்தது!

 

35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன  நடராஜர் சிலை சென்னையை அடைந்தது!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.

சென்னை: ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.

கடந்த 37 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து நடராஜர் சிலை திருடப்பட்டது. திருடப்பட்ட சிலை குறித்து அப்போது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 1984ஆம் ஆண்டு சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கை முடித்தனர். 

manickavel

இதையடுத்து   பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 35 வருடத்திற்குப் பிறகு நடராஜர் சிலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சிலையானது ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து வந்துள்ளது. இதை தொடர்ந்து  இந்தச் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லி கொண்டுவரப்பட்டது. 

sivan

இந்நிலையில் நடராஜர் சிலையானது இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இந்த சிலையானது  கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதுகுறித்து வழக்கு வழக்கு நடைபெறும் என்பதால் இதை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட இந்த நடராஜர் சிலை 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.