Home தமிழகம் 35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை பார்த்ததில்லை ! போலீஸ் தகவல்

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை பார்த்ததில்லை ! போலீஸ் தகவல்

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை இதுவரை பார்த்ததில்லை என சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

35 கிலோமீட்டர் தூரம் காரிலேயே சென்ற அதிபரை இதுவரை பார்த்ததில்லை என சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

chennaisecuirtypolice

அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை காவல்துறை ஒருமாதம் பயிற்சி மேற்கொண்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் கண்காணித்த காவல்துறை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்தனர். சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 110-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். சீன அதிபர் செல்லும்  அனைத்து இடங்களிலும் டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் இணை ஆணையர் சுதாகர் கூறும்போது தனக்கு தெரிந்தவரை இவ்வளவு தூரம் எந்த அதிபரும் காரில் பயணம் செய்ததில்லை என தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி...

காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தித்தொடர்பாளராக நியமனம்

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக...

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: தேமுதிக மாநில செயலாளர் சுதீஷ்

கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆம்பூர் தேமுதிக நகர செயலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறினார்

“2015 பெரு வெள்ளத்தில் பாடம் கற்காத அதிமுக அரசு” – கனிமொழி பேட்டி

கோவை சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து, அதிமுக அரசு பாடம் கற்றுக்கொள்ள வில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். சேலத்தில் நாளை...
Do NOT follow this link or you will be banned from the site!