சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

 

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு பணியில் ஈடுபட்டிருக்கின்றன. திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யமும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டில் அதிருப்தி இருப்பினும் வேறு வழி இல்லாமல் அக்கட்சிகள் கூட்டணியில் தொடருகின்றன. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸுக்கு இழுபறி ஏற்பட்ட போது, மநீம காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், காங்கிரஸ் அதனை ஏற்கவில்லை. இதனிடையே மநீம, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கைகோர்த்து கூட்டணியை உறுதிப்படுத்தியது.

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதே போல, இந்திய ஜனநாயக கட்சிக்கும் 34 தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாம். தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கே அதிகபட்சமாக 25 தொகுதிகள் தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலை தான் அதிமுகவிலும். அதிமுக கூட்டணியில் அதிக பட்சமாக பாமகவுக்கு 23 தொகுதிகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், மக்கள் நீதி மய்ய கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 34 தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பது பிற கூட்டணி கட்சிகளை வாய் பிளக்க வைத்திருக்கிறதாம்..!