34 சதவீத மருத்துவ பரிசோதனை முடிவுகள் பொய் ! அதிர்ச்சி தகவல் !

 

34 சதவீத மருத்துவ பரிசோதனை முடிவுகள் பொய் ! அதிர்ச்சி தகவல் !

நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள் பெரும்பாலானவை தவறான முடிவுகளையே தெரிவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள் பெரும்பாலானவை தவறான முடிவுகளையே தெரிவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

ttn

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 34 சதவீதம் பேரின் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்ததில் அது தவறானவ என்பது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், தரமற்ற மருத்துவ உபகரணங்கள், மற்றும் தகுதியில்லாத பணியாளர்களை வைத்து தனியார் ஆய்வகங்கள் இயக்கப்படுவதும் கூடுதல் அதிர்ச்சி தகவலாக உள்ளது. மக்கள் உயிருடன் விளையாடும் ஆய்வகங்களைக் கண்டறிந்து மூட வேண்டும் என சுகாதார ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.  உரிய மருத்துவ சாதனங்கள், வசதிகள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளது.

ttn

நாடு முழுவதும் 1 லட்சம், தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேலான ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 10 சதவீதம் மட்டுமே முறைப்படி பதிவு செய்து இயங்கி வருகிறது. 

‘லோக்கல் சா்க்கிள்ஸ்’அமைப்பு தேசிய அளவில் ஆய்வகங்களின் தரம் குறித்து ஓா் ஆய்வினை நடத்தியது. ரத்தம், சிறுநீா், சளி, திசு, மலம் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. ஆய்வில் பங்கேற்றவா்களில் 66 % போ், தாங்கள் எந்த ஆய்வகத்துக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவா்களே பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளனா். பரிசோதனை முடிவுகளில் 34 சதவீதம் தவறானவையாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.