Home அரசியல் 34 வகை கடைகளைத் திறந்தது போல் கோவில்களையும் திறக்க வேண்டும்! - அரசுக்கு பா.ஜ.க தலைவர் கோரிக்கை

34 வகை கடைகளைத் திறந்தது போல் கோவில்களையும் திறக்க வேண்டும்! – அரசுக்கு பா.ஜ.க தலைவர் கோரிக்கை

படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதியும் அளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

தமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க அனுமதி அளித்ததுபோல், கோவில்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதியும் அளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீளுவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீள வேண்டும், மன நிம்மதி பெற வேண்டும். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதற்கான தீர்வு ஆலய வழிபாட்டில்தான் உள்ளது.

devotees

எனவே, ஆலயங்களையும் விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். ‘நெஞ்சுக்கு நிம்மதி இறைவன் சன்னதி’ என்று சொல்வது போல இறைவன் தரிசனமே மக்களுக்கு அச்சத்தைப் போக்கி ஒரு வித நிம்மதியை அளித்து விடும்.
அதுமட்டுமல்ல, நமது ஆலயங்களும் பொருளாதார கேந்திரங்கள்தான். ஒவ்வொரு ஆலயத்திதையும் நம்பி, பூக்கடைக்காரர்கள், பிரசாதக் கடைக்காரர்கள், புத்தகக் கடைக்காரர்கள், புகைப்படக் கடைக்காரர்கள், தேங்காய் பழ வியாபாரிகள், பக்தி இசைத்தட்டு விற்பனையாளர்கள் என எண்ணற்ற வர்த்தகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களும் பொருளாதார தேக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.

murugan-bjp-56

எனவே, மற்ற கடைகளைத் திறக்க அனுமதித்தது போல, இவர்களும் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனில், ஆலயங்கள் திறக்கப்பட்டாக வேண்டும். இதனால், ஆலயத்தையே நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், பரிசாரர்கள், சமையல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் கூட பொருளாதார வழி திறக்கும்.
ஆலயங்களில் நடக்கும் தினசரி வேள்விகள் தகுந்த வழிகாட்டு நெறிமுறையோடு நடத்தப்படும்போது அதுவே தொற்றுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடும். தரிசனத்துக்கான நபர்களைத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஒருவர் பின் ஒருவராக அனுப்பலாம். இவை தனிநபருக்கும் சமூகத்துக்கும் மிகுந்த ஆறுதல் தரலாம்!

எனவே, பக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Most Popular

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்!

பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர் எஸ்பிபி என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய இசை உலகின்...

போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்...

“ஐ !எனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் ?

ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

கொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று. செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின்...
Do NOT follow this link or you will be banned from the site!