தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதிஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

 

தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதிஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

வருவாய் பற்றாக்குறையை போக்க தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டு வருகிறது. 2015-2020 ஆம் ஆண்டில் வரிப் பகிர்வு 42% சதவீதமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு 41% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதிதாக உருவான ஜம்மு – காஷ்மீர், லடாக் பிரதேசங்களுக்கு நிதி வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதிஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

இதனைத்தொடர்ந்து 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வருவாய் பற்றாக்குறையை போக்க தமிழகத்துக்கு 6ஆவது தவணையாக ரூ.335.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு, அதிகபட்சமாக கேரள மாநிலத்துக்கு ரூ.1,276.91 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.