332, 353, 506 – ஆந்திர போக்குவரத்து காவலரை தாக்கிய எம்.எல்.ஏ. மகன்மீது பாயும் ஐ.பி.சி.

 

332, 353, 506 – ஆந்திர போக்குவரத்து காவலரை தாக்கிய எம்.எல்.ஏ. மகன்மீது பாயும் ஐ.பி.சி.

உதவிக்கு ஓடிவந்த போக்குவரத்து அதிகாரியை எட்டி உதைக்கிறார். இதுவே, பொதுஜனமாக இருந்திருந்தால் உடனடியாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகாலில் கட்டு போட்டிருப்பார்கள். எம்.எல்.ஏ மகனாக போய்விட்டதால், மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.

வாராது வந்த மாமணியாய் கிட்டத்தட்ட 10 வருடங்கள் முதல்வர் பொறுப்புக்காக காத்திருந்து, கட்சியை உடைத்து, ஜெயிலுக்குப் போய், தேர்தலில் தோற்று, ஆந்திர முழுமைக்கும் நடையாய் நடந்து ஆட்சிக்கு வந்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு நாள் முதல்வர் போல நாளொரு அதிரடியும் பொழுதொரு அறிவிப்புமாக ஜமாய்க்கிறார். அவர் சிறுகச்சிறுக சேர்த்துவரும் நல்ல பெயரை எல்லாம் அவர் கட்சி நிர்வாகிகள் தூள்தூளாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஜக்கையைபேட்டை தொகுதியின் எம்.எல்.ஏவான சமினேனி உதயபானுவின் மகன் இப்போது அவர் தந்தைக்கும் ஆட்சிக்கும் கெட்டப் பெயர் வாங்கி தந்திருக்கிறார்.

AP police on duty

மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குகிறவர்களுக்கே சனி, ஞாயிறு வந்துவிட்டால் தலைகால் புரிவதில்லை. வீக்கெண்டை கொண்டாடியே தீர்வேன் என அடம்பிடித்து காசை கரியாக்குகிறார்கள். எம்.எல்.ஏ. மகனான சமினேனி பிரசாத்துக்கு அந்த ஆசை வந்ததை தவறு சொல்லவா முடியும்? வீக்கெண்ட் பார்ட்டிக்காக ஞாயிற்றுக்கிழமை காரில் போக்குவரத்து விதிகளை மீறி சென்றவரை, போக்குவரத்து காவலர் தடுக்கிறார். நான் யார் தெரியுமா, எங்கப்பா யார் தெரியுமா என்ற டெம்ப்ளேட் சவுண்டோடு காரைவிட்டு கீழே இறங்கிய பிரசாத் போக்குவரத்து காவலரை தாக்குகிறார், உதவிக்கு ஓடிவந்த போக்குவரத்து அதிகாரியை எட்டி உதைக்கிறார். இதுவே, பொதுஜனமாக இருந்திருந்தால் உடனடியாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகாலில் கட்டு போட்டிருப்பார்கள். எம்.எல்.ஏ மகனாக போய்விட்டதால், மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.