கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 33 வயதான மருத்துவர் உயிரிழப்பு!

 

கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 33 வயதான மருத்துவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உயிரழப்பது தான். இந்த நிலையில், சென்னையில், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 33 வயதான மருத்துவர் உயிரிழப்பு!கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 33 வயதான மருத்துவர் உயிரிழப்பு!

மருத்துவர் வினோத் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இவரது உடல் பட்டினப்பாக்கத்தில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில்அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் வினோத்திற்கு 33 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.