சென்னையில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா… அதிர்ச்சி தகவல்!

 

சென்னையில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா… அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் மட்டும் நாளொன்றுக்கு 100ம் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா… அதிர்ச்சி தகவல்!

தமிழகம் முழுவதும் நேற்று 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 800க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொரோனா உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதனால், மக்கள் அதிகமாக வசிக்கும் மாநகரமான சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா… அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் தங்க நகை பட்டறையில் 22 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகை பட்டறையில் பணிபுரியும் 54 மேற்கு வங்க மாநில தொழிலாளர்களில் 22 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அதே போல, அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு கொத்துக் கொத்தாக மீண்டும் கொரோனா பரவுவது சென்னை வாசிகளை பீதியடையச் செய்துள்ளது.