3 நிமிடத்தில் 33 % சார்ஜ் செய்யும் சார்ஜர் – அறிமுகப்படுத்தும் ரியல்மி !

 

3 நிமிடத்தில் 33 % சார்ஜ் செய்யும் சார்ஜர் – அறிமுகப்படுத்தும் ரியல்மி !

மூன்று நிமிடத்தில் 33 சதவீதம் சார்ஜ் செய்யும் 125 வாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜரை விரைவில் ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

3 நிமிடத்தில் 33 % சார்ஜ் செய்யும் சார்ஜர் – அறிமுகப்படுத்தும் ரியல்மி !

இந்ந தகவலை, அந்நிறுவனத்தின் ஐரோப்பா மற்றும் இந்திய பிரிவுகளுக்கான முதன்மை செயல் அதிகாரியான மாதவ் ஷேத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த சார்ஜரின் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள அவர், விரைவில் ஐரோப்பாவில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், ரியல்மி நிறுவனத்தின் அதிகபட்ச திறன் சார்ஜர், 65 வாட்ஸ் மட்டுமே ஆகும். இந்நிலையில் விரைவில் இந்த 125 வாட்ஸ் சூப்பர் பாஸ்ட் சார்ஜர் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த பாஸ்ட் சார்ஜர் எந்த புதிய போனுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரியவில்லை.

3 நிமிடத்தில் 33 % சார்ஜ் செய்யும் சார்ஜர் – அறிமுகப்படுத்தும் ரியல்மி !

இந்த 125 வாட்ஸ் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்தால், 20 நிமிடத்தில் 4000 எம்ஏஎச் பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆகி விடும் என ரியல்மி தெரிவித்துள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரியில் 33 சதவீத சார்ஜை வெறும் 3 நிமிடத்தில் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் செய்து விடும் திறன் பெற்றது என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்