Home சினிமா ’நான் சொல்றப்ப சைலண்டா இருக்கு… நீ சொன்னா வயலண்டா ஆவுதே’ பிக்பாஸ் 32-ம் நாள்

’நான் சொல்றப்ப சைலண்டா இருக்கு… நீ சொன்னா வயலண்டா ஆவுதே’ பிக்பாஸ் 32-ம் நாள்

’அவ்வை சண்முகி’ யில் டெல்லி கணேஷை தெளிய தெளிய வெச்சு அடிப்பாங்களே… அதுபோல… ரெண்டு நாளா பஞ்சாயத்தில் அடிகள் பலமா விழுந்ததால இன்னிக்கு தெளிய வைக்கிற மாதிரி ஜாலியான டாஸ்க்குகள் கொத்து குஷியாக்கினார் பிக்பாஸ். சண்டையும் இல்ல… சமாதானாமும் இல்லாம பழைய மோடுக்குத் திரும்பிய எப்பிசோட்.

32-ம் நாள்

தினமும் காலையில பாட்டை ஒலிக்க விடுற ஆள் இந்த சீசன்ல மாறிட்டாங்கன்னு நினைக்கிறேன். அநேகமாக 2K கிட்ஸா இருக்கலாம். நிறைய புது பாட்டா போடறது மாதிரியே முதன்நாள் பஞ்சாயத்துக்கு ஏத்த மாதிரியும் போடறாரு… நேத்து சர்ச்சைக்குள்ளான தறுதலை வார்த்தை வரும் ‘ஆத்தங்கர ஓரத்துல நின்னாளே…” ஒலிக்க விட்டாரு தம்பி.

எல்லோரும் அவசரம் அவசரமாக எழுந்து ஆட வந்துட்டு இருக்க, காலையில் ஷிவானிக்கு முதல் வேலையான பாலாவை எழுப்பிட்டு ஆட வந்தார்.

பப்ளிக் டாய்லெட்க்கு வெளியே நிற்கிற அவஸ்தையை காட்டிட்டு இருந்தார் ரியோ. அப்போ திடீர்ன்னு ஒரு பொண்ணு கிராஸ் பண்ண, ‘ஹே ஹாய்’ எனும் மோடுக்குப் போய் மறுக்கா அவஸ்தைக்குத் திரும்பியது செம.

பீச்சில் சுண்டல், முறுக்கு விற்கிற டாஸ்க்காம். அர்ச்சனா ஆரம்பிக்க, பாலா தொடர, வாளி ஆரி கையில போனது. ‘ஆடிசனுக்கு வந்த இளம் நடிகன் போல’ தத்ரூபமாக நடிக்க ட்ரைப் பண்ணிட்டு இருந்தார். அப்போ ரியோ ஏதோ குறுக்க பேச சூடாகி, ‘பர்ஃபாமன்ஸ் பண்ண விடுங்கடா’ என்று கத்திட்டு குந்திகிட்டார்.

உள்ளே சம்யுக்தா, பாலா, சுசி மூவரும் ஆரியின் கத்தலைப் பற்றி கமெண்டிட்டு இருந்தாங்க. ‘நீங்க கேளுங்க சாம்… நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேனு’ ஊக்குவித்துகொண்டிருந்தார் சுசி. நன்னா பண்றீங்க மேடம்.

அர்ச்சனா அண்ட் கோ சமைச்சதை சுரேஷ் சாப்பிட மாட்டேன்னு பிடிவாதமாய் இருந்தார். நிஷா கைப்பட்டதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்வேனு சபதம் எடுத்தார். (ஓஹோ…)

பஞ்சாயத்து நம்பர் 6

நிஷா மீது பிராது கொடுத்தது ரியோ. இரண்டு புகார். ஒண்ணு, எல்லோர் கிட்டேயும் அன்பை எதிர்பார்க்கிறார். ரெண்டு, நல்ல முடிவை எடுத்துட்டு அதை அவர் செய்யாமல் மற்றவரை ஏவிவிடுகிறார்.

பதில் சொன்ன நிஷா, ‘அன்பை எதிர்பார்க்கிறது தப்பில்லனு முதல் பிராதை கிழிச்சார். அடுத்து, சரியா முடிவெடுத்து சரியான ஆளை வெச்சி செய்யறதா… சுத்தி வளைச்சு சொன்னார். இதுவரைக்கும் சரியாத்தான் போனுச்சு.

ரியோ சப்போர்ட்டரா ஆரி வந்தாரு. ‘சரியான முடிவுகளை எடுக்காமல், க்ரூப்க்குள்ள ஒளிச்சிட்டு இருந்ததாலதான் ஆமா சாமி விருதுகொடுத்தாங்க’னு லென்த்தா பேச அதிர்ச்சியானார் ரியோ. ’சமரசிம்மா ரெட்டி’ காமெடி விவேக் மாதிரி, இதே புகாரை நான் சொல்லும்போது சைலண்ட்டாத்தானே இருந்துச்சு. நீ பேசும்போது எப்படிடா வயலண்ட்டா மாறுச்சு’னு மிரண்டு நின்னார். அதற்கு நிஷா தரப்பு வக்கீலாய் சரியான வேலையைச் செய்தார். ஆரி கிண்டி விட்டால் கத்திட்டு இருப்பார். அதை செஞ்சுட்டு அமைதியாயிட்டார் ரம்யா..

தீர்ப்பு நிஷா பக்கம். ஓடிபோய் கட்டிட்டு, இதுவும் ஸ்டேட்டர்ஜினு விளக்கிட்டு இருந்தார் ரியா. அப்படியாடா தம்பின்னு கேட்டார் நிஷா. கட் பண்ணினா, ரம்யாவை சமாதானப் படுத்திட்டு இருந்தார் ஆரி. ’நீங்க ஃபைனலஸிட்டா வருவீங்க’ னு ஆரி ஒரு பிட்டைப் போட, ‘அந்தளவுக்கு எதிர்கால திட்டமெல்லாம் எனக்கில்ல.. நிகழ்காலத்தைப் பத்திதான் யோசிப்பேன்’னு நழுவினார் ரம்யா.

பாலா – ஷிவானி ரொமான்ஸ் நேரம் தொடங்குச்சு. அதை வெளியே அர்ச்சனா அண்ட் கோ மற்றும் சிலர் மன்மதராசா, லூசு பெண்ணே பாட்டல்லாம் பாடி கிண்டலடிச்சிட்டு இருந்தாங்க. கேபியும் சேர்ந்துகிட்டார்.

மதியான நேரமும் வெறும் சோத்தைப் போட்டு தண்ணீ ஊத்தி சாப்பிட்டார் சுரேஷ். விசாரிக்கப்போன ரியோவுக்கு லைட்டா சூடு வெச்சார். என்ன செய்யறதுக்கு காத்திட்டு இருக்கார்னு தெரியல.

அடுத்து சமையல் டாஸ்க் கொடுத்தார் பிக்கி. அதாவது ரெண்டு டீம்மா பிரிஞ்சு, ஆங்காங்கே இருக்கும் பொருட்களைச் சேகரிச்சு, பிக்கி என்ன சமைக்க சொல்றாரோ அதை சமைக்கணும். ஆனா, இதை அர்ச்சனா விளக்கிச் சொன்னது ரொம்ப அழகா இருந்துச்சுனு நினைச்சிட்டு இருந்தப்பயே ‘விளக்கம் சிறப்பாக இருந்துச்சு அர்ச்சனா’என பிக்பாஸே பாராட்டை வைக்க, வெட்கப்பட்டார் அர்ச்சனா.

அர்ச்சனா தலைமையில் ஒரு டீம் பொங்கலும், ஷனம் தலைமையில் ஒரு டீம் கேசரியும் செய்ய நெய் வாசம் டிவியை விட்டு வெளியே வந்துடும்போலிருந்து. அவ்வளவு நெய் ஊத்தினாங்க. யார் சமையல் பெஸ்ட்ன்னு முடிவு செய்யறது சம்யுக்தாவாம். அப்பவே தெரிஞ்சுடுச்சிடுச்சு ஷனம் டீம்க்கு பரிசுகிடைக்காதுன்னு. அதேபோல, கேசரில இனிப்பு கம்மினு பொங்கலைச் செலக்ட் பண்ணினார்.

ரெண்டு நாளுக்கு முன்புதான் நாம் கட்டுரையில் எழுதும்போது ’இது தமிழ் பிக்பாஸா… இல்ல இங்கிலீஷ் பிக்பாஸான்னு தெரியாத அளவுக்கு எல்லோரும் இங்கிலிஷ்லேயே பேசிட்டு இருந்தாங்கனு சொல்லியிருந்தோம். நாம் சொன்ன விமர்சனம் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு கேட்டுச்சோ இல்லையோ… பிக்பாஸ்க்கு கேட்டுடுச்சு. சம்யுக்தாவை கூப்பிட்டு ஆங்கிலத்துல பேசக்கூடாதுனு எச்சரித்தார் பிக்பாஸ். ஆனா, அதை ஒரு தண்டனை மாதிரி நினைச்சிட்டு கிண்டல் பண்ணிட்டு இருந்தது ரொம்பவே ஓவர்.

அப்பறம் இது Fun டாஸ்க்… யாரும் அடிச்சிக்காதீங்க என்ற முன்னெச்சரிக்கை அறிப்போடு எஃப்.எம் டாஸ்க்கைக் கொடுத்தார். ஆர்ஜே வாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா.

ரொம்ப நாள் கழிச்சு, தொகுப்பாளர் வேலை கிடைச்ச உற்சாகத்தில் அர்ச்சனா வீட்டில் உள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகப்படுத்தினது அருமை… வாவ்… செம டேலண்ட்… அவ்வளவு நேரம் கடகடவென அர்ச்சனா பேசினதைக் கேட்டு நமக்கு மூச்சு வாங்குச்சு.

ரம்யாவின் வெட்கம், ஆஜித்தின் பாட்டு, அனிதா, கேபியின் ஜம்பிங் என உற்சாகத் துளிகளோடு இந்த டாஸ்க் போய்ட்டு இருந்துச்சு. ‘நயந்தாரா ஜோடின்னா… கதை கூட கேட்காம நடிப்பேனு சொன்னார் ஜித்தன் ரமேஷ் (ஆஹான்) கதை கேட்காம நடிச்சிதான் இந்த நிலைமையில இருக்கேன்னு புலம்பினது ஞாபகத்துக்கு வந்துச்சு.

டாஸ்க் முடிந்தும் அனிதா, கேபி, சோம், ரியோ மற்றும் சிலர் எஃப்.எம் பிராப்பர்ட்டியை வெச்சு விளையாட்டி இருந்தாங்க. அதைப் பார்க்கும்போது திருவிழா காலங்கள்ல ரேடியோ செட் கட்டுறவர்கிட்ட விளையாடும் சின்ன பசங்க மாதிரி இருந்தாங்க.

’பையன் மாதிரி’னு பாலாவை அர்ச்சனா சொல்லியிருந்த பொறுப்போடு, ‘ஷிவானிகூட சுத்திட்டு இருக்கிறதால, அவளுக்கு வெளியில பிரச்னை வரலாம்’னு எசசரித்தார். ‘ரைட்டு.. ரைட்டு’னு கேட்டிட்டு இருந்தார். ஆனா, வெளியே போய் ஷிவானியோடு தனியா உட்கார்ந்து (வழக்கம்போல) அர்ச்சனா காட்டுற அம்மா பந்தம் எனக்கு வேணாம்னு அவங்க கிட்டேயே சொல்லபோறேன். எனக்கு அப்படி ஏதும் ஃபீலிங் இல்ல’னு சொல்லிட்டு இருந்தார். பாலா உன்னை, உன்னால்கூட புரிஞ்சுக்க முடியாது போலிருக்கே.

இன்னொரு பக்கம் ‘மச்சி நீ கதவை திறந்துட்டு வா… நான் பாட்ஷா மியூசிக் போடறேன்’னு சோம் சொல்ல, அதை நம்பி ரியோ ஸ்டைலா, கெத்தா கண்ணாடி கதை உடைச்சுட்டு வர, ‘கரகாட்டகாரன்’ மியூசிக்கைப் போட்டு கலாய்த்தார்.

பிக்பாஸ் வீடு அன்பு, விளையாட்டு, கிராம்பு, பல்பொடி, கேசரி எல்லாம் கலந்து ஒரு கலவை என பிக்கி பின்பாட்டு பாட லைட்ஸ் ஆஃப்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

மாவட்ட செய்திகள்

Most Popular

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார். ரிபப்ளிக் டிவி...

மம்தாவுக்கு 62 ஆயிரம் வாக்குகள்தான.. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க 2.13 லட்சம் பேர் என்னிடம் உள்ளனர்.. சுவேந்து

மம்தா பானர்ஜி 62 ஆயிரம் வாக்குகளைதான் நம்பியுள்ளார். ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழங்க என்னிடம் 2.13 லட்சம் பேர் உள்ளனர் என்று பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதல் குறைவு… ராகுல் காந்தி தாக்கு

பிரதமர் மோடிக்கு அடிப்படைகளை புரிதலில் குறைவு உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் கேபிடல் ஹில்லில் (அந்நாட்டு பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள்...

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட கேலரியில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தர பிரதேச விதான் பரிஷத் (சட்டப்பேரவை)...
Do NOT follow this link or you will be banned from the site!