329 இந்தியர்கள் பிரிட்டனில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வருகை

 

329 இந்தியர்கள் பிரிட்டனில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வருகை

329 இந்தியர்கள் பிரிட்டனில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

மும்பை: 329 இந்தியர்கள் பிரிட்டனில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுக்க விமான போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. அதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்தியர்களை வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு கொண்டு மத்திய அரசு சிறப்பு ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், பயணக் கட்டுப்பாடு காரணமாக இங்கிலாந்தில் சிக்கித் தவித்த மொத்தம் 329 இந்தியர்கள் இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் மும்பை வந்தடைந்தனர்.

air india

நேற்று லண்டனில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் AI 130 – 326 இந்தியர்களுடன் அதிகாலை 1.30 மணியளவில் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (சிஎஸ்எம்ஐஏ) தரையிறங்கியது. இந்த விமானத்தில் 329 பயணிகள் இருப்பதாக சிவில் விமான அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டு வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” இன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் 64 விமானங்களில் இந்த விமானம் ஒன்றாகும்.