தெலுங்கானாவை புரட்டி போட்ட கனமழை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

 

தெலுங்கானாவை புரட்டி போட்ட கனமழை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஹைதராபாத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் வாகனங்களும், மக்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நேற்று வரையில் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கானாவை புரட்டி போட்ட கனமழை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

இதனால் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் களமிறங்கியுள்ளனர். ஹைதராபாத்தில் ஒரே நாளில் சுமார் 26 செ.மீ மழை பதிவாகியதால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. மழை நீடிக்கும் என்பதால் மக்கள் போக்குவரத்தை தவிர்த்து விட்டு வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவை புரட்டி போட்ட கனமழை; உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

இந்த நிலையில், தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் கட்டிடம் சரிந்து, மேற்கூரை விழுந்து, சுவர் இடிந்து விழுந்து பல விபத்துகள் நேர்ந்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியே பலர் உயிரிழந்திருப்பதாகவும் 9 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.