பீகாருக்கு 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பினர் – சிறப்பு ரயில்கள் விரைவில் நிறுத்தம்

 

பீகாருக்கு 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பினர் – சிறப்பு ரயில்கள் விரைவில் நிறுத்தம்

பாட்னா: பீகார் மாநிலத்திற்கு ஏற்கனவே 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளதால் அம்மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலால் மார்ச் இறுதி முதல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கே திரும்பியுள்ளனர். அந்த வகையில் இதுவரை பீகார் மாநிலத்திற்கு சுமார் 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் மார்ச் மாதத்திலேயே டெல்லி மற்றும் உத்தரபிரதேச அரசுகளின் உதவியுடன் பேருந்தில் பீகார் திரும்பினர்.

பீகாருக்கு 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பினர் – சிறப்பு ரயில்கள் விரைவில் நிறுத்தம்

இதனால் பீகாருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் 6 சிறப்பு ரயில்கள் மட்டுமே பீகார் மாநிலத்தை அடைந்தன. கேரளாவிலிருந்து இரண்டு, தமிழ்நாட்டிலிருந்து மூன்று மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து ஒரு ரயில் ஆகும். தினமும் சராசரியாக 140 சிறப்பு ரயில்கள் பீகார் மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் 1-ஆம் தேதி 23 சிறப்பு ரயில்கள் மட்டுமே பீகார் மாநிலத்தை அடைந்தன. இந்த ரயில்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.