கர்நாடகாவில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா! – பெற்றோர் அதிர்ச்சி

 

கர்நாடகாவில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா! – பெற்றோர் அதிர்ச்சி

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அங்கு 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. தெலங்கானா, தமிழகம் போல கர்நாடகாவிலும் 10ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எதிர்ப்பையும் மீறி 10ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கர்நாடகாவில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா! – பெற்றோர் அதிர்ச்சிதற்போது அங்குத் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. நேற்று மட்டும் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு எழுத வந்ததன் மூலம் 32 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவியுள்ளது.

கர்நாடகாவில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா! – பெற்றோர் அதிர்ச்சிஇன்னும் எத்தனை மாணவர்களுக்கு பரவியுள்ளது என்று தெரியவில்லை. வரும் நாட்களில் இதன் பாதிப்பு தெரியவரும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.