32 எம்.பி செல்பி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்!

 

32 எம்.பி செல்பி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிளாக்ஷிப் வகை ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேப்பரில் பேனாவால் எழுதுவது போல, இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவில் எஸ் பென் கொண்டு எழுத முடியும். இதுதான் இந்த சாதனத்தின் மிக முக்கியமான அம்சமாகும். ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி என்று இருவகையான ரேம்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களிலும் 128 ஜிபி மெமரி தரப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 38,999 என்றும், 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 40,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

top tamil news

இது தவிர 6.7 இன்ச் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே, ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 4500 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.