32 ஆண்டுகள் தந்த நிதானம்: இந்தியன் 2 படம் குறித்து விவேக் நெகிழ்ச்சி

 

32 ஆண்டுகள் தந்த நிதானம்: இந்தியன் 2 படம் குறித்து விவேக் நெகிழ்ச்சி

நடிகர் விவேக் இந்தியன் 2 படம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் விவேக் இந்தியன் 2 படம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளாக 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் நடிகர் விவேக். எதார்த்தமான தனது நகைச்சுவை தன்மையோடு சமூகத்திற்குக் கருத்தும் சேர்த்துச் சொல்வதால் இவருக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் இதுவரை பல முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால் தான் இன்னும் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவே இல்லை என்று ஒரு முறை பேட்டியில் தெரிவித்தார். 

இந்த நிலையில் தற்போது அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ஆம்… ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக்கத் ஏற்கனவே தகவல் வெளியானது. 

இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளதாகக் கூறி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘நிகழும் வரை சொப்பனம்; நிகழும்போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.