மதுரையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி.. 4 ஆயிரத்தைக் கடந்தது மொத்த பாதிப்பு!

 

மதுரையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி.. 4 ஆயிரத்தைக் கடந்தது மொத்த பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் மதுரை,தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு பொது முடக்கம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அமல்படுத்தப்பட்ட முழுப் பொது முடக்கம் இன்றோடு நிறைவடைகிறது.

மதுரையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி.. 4 ஆயிரத்தைக் கடந்தது மொத்த பாதிப்பு!

அதனால் மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நேற்று அறிவித்தார். மதுரை மாநகராட்சி எல்லை, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று என்று குறிப்பிட்ட அவர், மதுரையில் கொரோனா அதிகமாகப் பரவி வருவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த நிலையில், மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது.