ஒரேநாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

 

ஒரேநாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் தீவிரமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், இது திருவிழா என்கிற பெயரில் நடைபெறுகிறது. அதன்படி நான்காம் நாளான நேற்று 31.39 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செழுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

ஒரேநாளில் 31.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதுவரைக்கும் தலா ஒரு கோடிக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதாக கூறியிருக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்காக 69 ஆயிரத்து 974 மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

நேற்று இரவு எட்டு மணி வரைக்கும் நாட்டில் 11 கோடியே 43 லட்சத்து 18 ஆயிரத்து 455 ரோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது சுகாதாரத்துறை. தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1038 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்படுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.