கால்நடைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்ட 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

கால்நடைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்ட 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ராஜபாளையம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சமீப காலமாக ரேஷன் அரசி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. உணவுக்கு திண்டாடும் ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டு, அரசு அளிக்கும் இலவச ரேஷன் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்கின்றனர். இதற்கு ரேஷன் கடை ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்காக பதுக்கி வைக்கப்பட்ட 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இருக்கும் சேத்தூரில் இன்பராஜ் என்பவர் குடோன் ஒன்றை வைத்துள்ளார். அந்த குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அந்த இடத்துக்கு சென்ற அதிகாரிகள், குடோனில் இருந்த 31.2 டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இன்பராஜ் நடத்தி வந்த அந்த குடோனுக்கு சீல் வைத்துள்ளனர்.

ரேஷன் அரிசி பதுக்கியது ஏன் என அதிகாரிகள் இன்பராஜிடம் மேற்கொண்ட விசாரணையில், கால்நடைகளின் தீவனங்களுக்காக அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.