31 ஒளியாண்டுகள் தொலைவு, அங்க போக முடியாது, புரிஞ்சுக்கோங்கஜி ப்ளீஸ்

 

31 ஒளியாண்டுகள் தொலைவு, அங்க போக முடியாது, புரிஞ்சுக்கோங்கஜி ப்ளீஸ்

எங்க வீட்டுக்கு யார்யாரெல்லாம் வர்றாங்க என்பதை அவங்க வீட்டு வாசலிலிருந்தே கண்டுபிடிக்கும் எதிர்த்தவீட்டு 80 வயது பாட்டியோட கண்களின் துல்லியத்திற்கு நிகரான பார்வைகொண்ட டெலஸ்கோப்களை கொண்டது டெஸ்.

சந்திரனை ஆராய்வதற்காக நமது இஸ்ரோ இரண்டாவது முறையாக செயற்கைகோளை அனுப்ப, 50 ஆண்டுகளுக்கு முன்னதாக நிலவுக்கு ஆளனுப்பிய நாசா இன்னும் அட்வான்சாகதானே யோசிக்கும்? யோசித்தபடியே நிற்காமல், நமது சூரிய மண்டலத்தைத் தாண்டி இருக்கும் கோள்கள் குறித்த ஆராய்ச்சிக்கென டெஸ் என்ற செயற்கைக்கோளை 2018 ஏப்ரலில் விண்ணில் ஏவியது. எங்க வீட்டுக்கு யார்யாரெல்லாம் வர்றாங்க என்பதை அவங்க வீட்டு வாசலிலிருந்தே கண்டுபிடிக்கும் எதிர்த்தவீட்டு 80 வயது பாட்டியோட கண்களின் துல்லியத்திற்கு நிகரான பார்வைகொண்ட டெலஸ்கோப்களை கொண்டது டெஸ்.

More new planets outside solar system

பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள TOI 270 என்ற நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டே தனது கழுகுப்பார்வையை வீசியதில் இதுவரை சிக்கிய புதிய கோள்கள் 21. அதுபோக, இப்போது புதிதாக மூன்று கோள்களையும் டெஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த மூன்றில் ஒன்று 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாம். ட்ரம்ப், போரிஸ், மோடின்னு மூணுக்கும் பேர் வைக்கலாமே? அதுபோக, நாடு நாடா பறந்த நம்மாளு, இப்போ காடு காடா பேர் க்ரில்ஸோட சேர்ந்துகிட்டு அலையிறாரு, அடுத்து என்ன கோள் கோளா சுத்துற ப்ளான்தானே?