31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் நடக்கும் நிலையில், விவசாய மண்டலம் என்று அறிவித்தது எப்படி? – ஸ்டாலின் கேள்வி

 

31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் நடக்கும் நிலையில், விவசாய மண்டலம் என்று அறிவித்தது எப்படி? – ஸ்டாலின் கேள்வி

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தார். மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக மாநில அரசு இதுபோன்று அறிவிக்க முடியுமா? என்ற பொது அறிவு கூட இன்றி பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

காவிரி டெல்டா பகுதியில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நடந்து வரும் சூழலில், விவசாய மண்டலம் என்று அறிவித்தது ஏமாற்று வேலை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தார். மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக மாநில அரசு இதுபோன்று அறிவிக்க முடியுமா? என்ற பொது அறிவு கூட இன்றி பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

edapadi-palanisamy

இந்த நிலையில், சென்னையில் தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசும்போது இது குறித்து பேசினார். அப்போது அவர், “விவசாயி எனத் தன்னைத் தானே சொல்லிக்கொண்டு சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயப் பெருங்குடி மக்களை துயரத்துக்குள்ளாக்கி வருகிறார். அவரைப் போல அனைவரும் நடந்துகொண்டால் இந்த நாடு குட்டிச்சுவராகிவிடும்.
எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என இன்று நேற்றல்ல; தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதற்காகப் போராடி வருகிறார்கள்.

hydrocarbon-protest

வேளாண் மண்டலமாக ஆக்கினால் அது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை யார் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட அ.தி.மு.க அரசுக்கு இல்லையே? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது மத்திய அரசு.
இதற்கே இங்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது கெஜட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்கான நிதியை மத்திய அரசே வழங்கவேண்டும்.
ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை என்னாகும்? அந்தப் பணிகளை நிறுத்திய பிறகு, வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என உறுதியளித்த பிறகு, மத்திய அரசுதான் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளதா? அதை முதலமைச்சர் வெளிப்படையாகச் சொல்வாரா?
தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று மக்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநில அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என வினவியிருக்கிறார். அதற்கு மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி இதுகுறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கும் மத்திய அரசு விளக்கமளிக்கவில்லை.

hydrocarbon-project

நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்பவிருக்கிறோம். நாடாளுமன்றத்திலும், உள்ளாட்சியிலும் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றும் நோக்கில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
உண்மையாகவே, சரியான வழிமுறையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். நீட் தேர்வுக்கும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், நீட் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும் அதைச் செய்யவேண்டியது மத்திய அரசு. அதற்காக, மத்திய அரசை வலியுறுத்த இந்த அரசுக்கு அருகதை கிடையாது. மண்டியிட்டு ஆட்சி செய்துகொண்டிருக்கும் அடிமை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் வந்துகொண்டிருக்கிறது” என்றார்.