31 ஆம் தேதி வரை எந்த நீதிமன்றத்திலும் எந்தவித உத்தரவும் வழங்கப்படாது : சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு!

 

31 ஆம் தேதி வரை எந்த நீதிமன்றத்திலும் எந்தவித உத்தரவும் வழங்கப்படாது : சேலம்  மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு!

Calling கூட இல்லாமல் அனைத்து வழக்குகளுக்கும் வாய்தா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி இந்தியா வரை வந்துவிட்டது. இதுவரை கொரோனாவால் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எளிதில் பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

ttn

தமிழகத்தில் தியேட்டர், மால், பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டு விட்டன. கோவில்கள், சுற்றுலா தலங்களில் கூட மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல, நீதிமன்றங்களும் 31 ஆம் தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சேலம்  மாவட்ட முதன்மை நீதிபதி செல்போன் வாயிலாக அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், வரும் 31 ஆம் தேதி வரை  நீதிமன்றங்களுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் யாரும் வர வேண்டாம் என்றும் Calling கூட இல்லாமல் அனைத்து வழக்குகளுக்கும் வாய்தா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், எந்த நீதிமன்றத்திலும் எந்தவித உத்தரவும் வழங்கப்பட மாட்டாது அனைத்து வழக்குகளிலும் தற்சமயம் இருக்கும் சூழலே தொடரும் என்றும் ஜாமீன் மனு, அவசர தேவைக்கு மட்டுமே Calling செய்யப்படும் என்றும் குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் பாதகமான ஆணைகள்(adverse Orders) கிடையாது என்றும் கூறியுள்ளார்.