பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு!

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 1992 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் பாஜக தலைவர்கள் மீது தனி வழக்கு , லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு!

இந்த இரண்டு வழக்கில் தலைவர்கள் மீதான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் 2001 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. மேலும் இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு!

இதை தொடர்ந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் வழக்கை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இதை தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு வழக்கை சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு!

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இறுதிவாதம் அனைத்தும் முடிந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்குகிறார். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.