ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

 

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 5 வது முறையாக ஜூன் 28ம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கும் நிலையில், 4வது முறையாக ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 தேதி வரைக்கும் ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இதே போல் தமிழகத்தில் 5வது முறையாக ஊரடங்கினை ஜூன் 30ம் தேதி வரைக்கும் நீட்டிக்க முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

ஊரடங்கு வரும் 21ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஜூன் 30ம் தேதி வரைக்கும் 9 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 2 மணி வரைக்கும் இருந்த தளர்வுகள், இனிமேல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் என்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கலாம் என்றும், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் அனைத்து ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. தற்போதுள்ள நிலவரப்படி மதியம் 2மணி வரை மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மே24ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மீண்டும் மே31ம் தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 3வது முறை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், அந்த மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுடன் 21ம் தேதி வ ரை 4முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தொற்று அதிகமிருந்த 11 மாவட்டங்களில் ஈரோடு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் 36 மாவட்டங்களில் 5வது முறையாக ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

கடைகள் கூடுதல் நேரம் இயங்க அனுமதி, திருமணம், இறப்பு நிகழ்வுகளில் கூடுதல் நபர்கள் பங்கேற்க அனுமதிப்பது, பொது போக்குவரத்துக்கு அனுமதி, ஏசி இல்லாமல் பெரிய கடைகள் இயங்க அனுமதி என்று பல்வேறு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.