வாக்கு எண்ணிக்கை முடிவுகளை 30 சுற்றுகளாக வெளியிட ஏற்பாடு

 

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை 30 சுற்றுகளாக வெளியிட ஏற்பாடு

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கும் கடந்த 6ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை 30 சுற்றுகளாக வெளியிட ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதி தேர்தலுக்கும் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கும் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை 30 சுற்றுகளாக வெளியிட ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு முதல் சுற்று நிலவரத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கியை அமைக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 30 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் 417 வாக்குச் சாவடியில் உள்ள மின்னனு எந்திரங்கள் ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்கு இயந்திரங்கள் என்கிற விகிதத்தில் முப்பது சுற்றுகளில் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை மாலை நாலு மணிக்கு மேல் இறுதி முடிவுகள் தெரியவரும் என்று தெரிகிறது.