307 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா…இன்னுமொரு தோல்விக்குத் தயாராகும் பாகிஸ்தான்…

 

307 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா…இன்னுமொரு தோல்விக்குத் தயாராகும் பாகிஸ்தான்…

அதிரடியாக ஆடிய ஃபின்ச் 82 ரன்களில் முகமது அமீரின் வேகத்தில் வீழ்ந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர் – ஃபின்ச் தொடக்க ஜோடி 146 ரன்களை குவித்தது. இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

உலக கோப்பை தொடரில் இன்று டவுண்டனில் நடந்துவரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பவுலிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே தெளிவாக ஆடினர். வார்னர் நிதானமாக ஆட, ஃபின்ச் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 

pak vs aus

வார்னர் – ஃபின்ச் தொடக்க ஜோடியை பிரிக்கமுடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. ஹஃபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடுத்தடுத்த பந்துகளில் அடித்து மிரட்டிய ஃபின்ச், அரைசதத்திகு பிறகு மீண்டும் ஹஃபீஸின் மற்றொரு ஓவரையும் அடித்து நொறுக்கினார். ஹஃபீஸ் வீசிய 21வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்கள் அடித்து மிரட்டினார். ஃபின்ச்சை தொடர்ந்து வார்னரும் அரைசதத்தை அடித்தார். 

அதிரடியாக ஆடிய ஃபின்ச் 82 ரன்களில் முகமது அமீரின் வேகத்தில் வீழ்ந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர் – ஃபின்ச் தொடக்க ஜோடி 146 ரன்களை குவித்தது. இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்டெடியாக ஆடிய வார்னர் 111 பந்துகளில் 107 ரன்கள் அடித்து தனது அணி 307 ரன்கள் குவிக்க உதவினார். ஒரு கட்டத்தில் 350 ரன்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய கடைசி 10 ஓவர்களில் மளமளவென விக்கட்டுகளைப் பறிகொடுத்து 49வது ஓவரிலேயே ஆட்டம் இழ்ந்தது. முகம்மது அமிர் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 307 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய ஆரம்பித்திருக்கும் பாக் அணி துவக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்து ஒரு  தரமான தோல்விக்கு தயாராகிவருகிறது. இரவு 7.30 நிலவரப்படி7.4வது ஓவர் முடிவில் வெறும் 39 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.