303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

 

303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது. அவர் விரைந்து ஒப்புதல் அளித்து விட்டால், நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதனால் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்த அமைச்சர்கள் விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேர் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் விரைவில் ஆளுநர் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார் என்றும் தெரிவித்தார்.