மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 65.55 அடியாகவும், நீர் இருப்பு 28.99 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.