3,000 டன் அல்ல வெறும் 160 கிலோதான் கிடைக்கும்….. உத்தர பிரதேச தங்க சுரங்கங்கள் குறித்து உண்மையை வெளியிட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம்..

 

3,000 டன் அல்ல வெறும் 160 கிலோதான் கிடைக்கும்….. உத்தர பிரதேச தங்க சுரங்கங்கள் குறித்து உண்மையை வெளியிட்ட இந்திய புவியியல் ஆய்வு மையம்..

அந்த பகுதியில் வெறும் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாவட்டம் சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் மறுத்துள்ளது. அந்த பகுதியில் வெறும் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பஹடி மற்றும் ஹர்டி பகுதியில் மொத்தம் சுமார் 3 ஆயிரம் டன் தங்க படிமங்கள் கொண்ட தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களால் சோன்பத்ரா மாவட்டம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் கவனம் பெற்றது.

 

tn

ஆனால் சோன்பத்ரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள் தங்க சுரங்கங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் கிடைக்கும் என்ற தகவலை மறுத்ததுடன் வெறும் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் எம். ஸ்ரீதர் கூறியதாவது: கனிமங்கள் உள்ள பகுதியில் ஒரு டன் தாதுவில்  சராசரியாக 3.03 கிராம் தங்கம் இருக்கும். அதன்படி 52,806 டன் தாதுவிலிருந்து சுமார் 160 கிலோ தங்கம் மட்டுமே பெற முடியும் 3 ஆயிரம் டன் அல்ல.

 

 

சோன்பத்ரா மாவட்டத்தில் 3 ஆயிரம் டன் தங்க படிமங்கள் உள்ளதாக இந்திய ஆய்வு மையத்திலிருந்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை மற்றும் இவ்வளவு பெரிய வளம்  கொண்ட தங்க படிமங்கள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மதிப்பீடும் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக, பரப்பாக வெளிவந்த தங்க சுரகங்கள் செய்தி கடைசியில் ஒரேநாளில் மங்கி விட்டது.