சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் 300 தமிழர்கள் – மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளுமா?

 

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் 300 தமிழர்கள் – மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளுமா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரண்டு மாதங்களாக 300 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்களை சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்தது. இருப்பினும், இன்னும் சில நாடுகளில் இந்தியர்கள் ஓரிரு மாதங்களாக சொந்த நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், சிங்கப்பூரில் கடந்த 2 மாதங்களாக 300 தமிழர்கள் தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை. தங்களை மீட்டு செல்ல சிறப்பு விமானங்களை சிங்கப்பூருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.