நகைக்கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளை

 

நகைக்கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் 300 சவரன் தங்கநகைகளை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அசூரி தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகேந்திரன்(52). இவர் தங்க கட்டிகளை வாங்கி, நகையாக தயாரித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு, சப்ளை செய்து வந்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளை

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் திருவள்ளூரில் இருந்து ஆட்டோ முலம் மகேந்திரன், அவரது மகன் ஆசிப் மற்றும் அவரது உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் பேரம்பாக்கம் மற்றும் சுங்குவார் சத்திரம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று நகைகளை வழங்கியுள்ளனர். இறுதியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நகைக்கடைக்கு செல்வதற்காக, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.

நகைக்கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளை

அப்போது, மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே சென்றபோது, 3 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ஆட்டோவை வழிமறித்து, கத்திமுனையில் மகேந்திரனிடம் இருந்த சுமார் 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில், மகேந்திரனின் உதவியாளர் ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து நகைப்பறிப்பு சம்பவம் குறித்து மகேந்திரன் இன்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

நகைக்கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளை

புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் , பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எவ்வாறு பாதுகாப்பின்றி விற்பனை செய்து வருகிறார் என்றும், எங்கிருந்து தங்க கட்டிகளை வாங்கி வருகிறார் எனவும் மகேந்திரனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.