திருவாரூர் அருகே மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

 

திருவாரூர் அருகே மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் நேற்று முன் தினம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சென்னையின் பெரும்பாலான இடங்களில் நேற்று விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் கோடைக்கால நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

திருவாரூர் அருகே மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

இந்த நிலையில் திருவாரூர் அருகே 3 நாட்களாக பெய்த கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். நீரில் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.