300 தீவிரவாதிகள் பலி: இந்திய விமானப் படையின் பதிலடி – பிரதமர் அவசரக் கூட்டம்

 

300 தீவிரவாதிகள் பலி: இந்திய விமானப் படையின் பதிலடி – பிரதமர் அவசரக் கூட்டம்

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலி என்று கூறப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 300 தீவிரவாதிகள் பலி என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு நாடே கொந்தளிப்பில் இருந்தது, தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சில தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் செய்தனர். இந்த தாக்குதலில் கூட 4 இந்திய இராணுவத்தினர் பலியாகினர். 

தீவிரவாத இயக்கத்தின் மீது பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தகுந்த ஆதாரங்களை அளித்தால் புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்களின் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய எல்லையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் பலரும் இந்திய விமானப் படையின் நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.