300 கிலோவிலிருந்து 86 கிலோவிற்கு மாறிய பெண்: புதிய வாழ்க்கைக்கு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

 

300 கிலோவிலிருந்து 86 கிலோவிற்கு மாறிய பெண்:  புதிய வாழ்க்கைக்கு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

பெண் ஒருவர் அறுவை சிகிச்சை உதவியினால் 214  கிலோ எடையைக் குறைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: பெண் ஒருவர் அறுவை சிகிச்சை உதவியினால் 214  கிலோ எடையைக் குறைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

amitha

மும்பையைச் சேர்ந்தவர் அமிதா ரஜினி. 46 வயதான இவர் அதீத உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை 300 கிலோவை தொட்டது. அமிதா பிறந்தபோது அவரது எடை சரியாக இருந்ததாகவும் அவரின் 6 வயதில் தான் மருத்துவர்கள் அவர் வயதுக்கேற்ற எடையில் இல்லை என்றும் கூறியுள்ளனர். அமிதா கடுமையான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டோடு  இருந்த போதிலும் அவர் தனது 16 வயதிலேயே 126 கிலோ எடையை எட்டியுள்ளார். இவரது 28வது வயதில் இவரை கவனித்துக் கொள்ள 2 உதவியாளர்கள் இருந்துள்ளனர். அமிதா அவரது அறையிலிருந்து கழிவறைக்குச் செல்ல சுமார் 45 நிமிடங்கள் ஆகுமாம். இப்படி உடல் எடையால் சிறு வயது முதலே அவதிப்பட்டு வந்துள்ளார் அமிதா ரஜினி. 

amitha

இதையடுத்து உறவினர் ஒருவரின் பரிந்துரையின்படி டாக்டர்.ஷாவிடம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார் அமிதா. அதற்காக புனே செல்ல முடிவெடுத்த அவர் டெம்போ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஒரு சோபா போடப்பட்டு  அதில் அமர்ந்து அமிதா புனேவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் அமர்ந்து சென்ற சோபாவில் இருந்து அவரை  தூக்குவதற்கு மட்டும் 18 பேரின் உதவி தேவைப்பட்டதாம். 

amitha

இந்த பெரும் முயற்சிக்கு பிறகு டாக்டர்.ஷா  இவருக்கு  2015 ஆம் ஆண்டு முதல் அறுவை கிசிச்சையை செய்துள்ளார். அதில் குறிப்பாக அமிதாவின் பசியை குறைக்க அவரது வயிற்றில் ஒரு பகுதியை நீக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டே ஆண்டுகளில் அவர் 130 கிலோ வரை எடையை குறைத்தார். இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அறுவை சிகிச்சையில், அமிதா பல்வேறு நோய்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடை எடையானது  86 கிலோவாக மாறியுள்ளது. மருத்துவர்களின் இந்த முயற்சியாலும் அமிதாவின் தன்னம்பிக்கையாலும் இவர் நான்கே  ஆண்டுகளில் 214  கிலோ எடையைக் குறைத்துள்ளது மருத்துவ உலகின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.