300 ஏக்கரில் வனத்தை உருவாக்கிய தனி மனிதர்!

 

300 ஏக்கரில் வனத்தை உருவாக்கிய தனி மனிதர்!

forest

மணிப்பூர், மேற்கு இம்பால் லேகைய்  கிராமத்தை சேர்ந்த வன ஆர்வலர் ஒருவர், மருந்து விற்பனை தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். வனங்களின் மீது தீராத காதல் கொண்ட அவர், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, தான் பார்த்துக் கொண்டிருந்த மருந்து விற்பனை தொழிலை ராஜினாமா செய்து விட்டு முழு நேரமும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.

man

மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டிய அவருக்கு அந்த பகுதி மக்களும், வனத்துறையும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதன் காரணமாக இதுவரையில் சுமார் 18 ஆண்டுகளாக தொடர்ந்து மரம் நடும் பணியில் ஈடுபட்டு வரும் அவர் இதுவரை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய வனத்தையே தனி மனிதனாக உருவாக்கி சாதித்திருக்கிறார்.
அவரது இந்த முயற்சிக்கும், செயலுக்கும் வனத்துறையும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.