300 அடி ஆழ பள்ளத்தில் தொங்கிய படி நிற்கும் லாரி.. மீட்புப்பணி தீவிரம் !

 

300 அடி ஆழ பள்ளத்தில் தொங்கிய படி நிற்கும் லாரி.. மீட்புப்பணி தீவிரம் !

லாரி சாலையில் இருந்த தடுப்புச் சுவர்களை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழும் படி சென்றுள்ளது. 

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து லாரி ஒன்று தமிழகத்திற்குப் பருப்பு மூட்டைகளை ஏற்றுக் கொண்டு வந்துள்ளது. அந்த லாரி இன்று காலை தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பகுதியில் உள்ள எஸ் வளைவில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அங்கு மொத்தம் 300 அடி பள்ளம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், லாரி சாலையில் இருந்த தடுப்புச் சுவர்களை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழும் படி சென்றுள்ளது. 

ttn

இருப்பினும் சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஓட்டுநர், லாரி பள்ளத்தில் கவிழும் முன் லாரியை நிறுத்தியுள்ளார். அதாவது, லாரியின் முன்பக்கம் பாதி பள்ளத்தில் தொங்கியவாறு லாரியை நிறுத்தியுள்ளார். இதில், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற லோயர்கேம்ப் காவல்துறையினர் லோடு அதிகமாக இருந்தால் லாரியை மீட்க முடியாது என்பதால், அதில் இருக்கும் பருப்பு மூட்டைகளை முதலில் கீழே இறக்கியுள்ளனர். அதன் பின்னர், கிரேன் மூலம் லாரியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.