வெளியே சாப்பாட்டு கடை -உள்ளே பலான தொழில் -நெடுஞ்சாலையில் நடந்த மோசடி.

 

வெளியே சாப்பாட்டு கடை -உள்ளே பலான தொழில் -நெடுஞ்சாலையில் நடந்த மோசடி.


ஒரு நெடுஞ்சாலை உணவகத்தின் உள்ளே பலான தொழிலை நடத்தி வந்த பலரை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி கைது செய்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

வெளியே சாப்பாட்டு கடை -உள்ளே பலான தொழில் -நெடுஞ்சாலையில் நடந்த மோசடி.


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தரில் 30 வயதான நிஷா என்ற அமர்ஜித் ஜஸ்வந்த் சிங் கவுர் என்ற பெண் வசித்து வந்தார் .அந்த பெண் பல பெண்கள் மற்றும் டீனேஜ் சிறுமிகளை வைத்து பலான தொழில் நடத்தி வந்தார் .அவர் வெளியே உணவகம் என்ற போர்டு வைத்து விட்டு ,அந்த கடையின் உள்ளே பல பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தார் .இந்த தொழில் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
அந்த ரகசிய தகவலின் பேரில் பயந்தர்-வசாய் விரார் (எம்பிவிவி) போலீசார் செவ்வாயன்று மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர் .அப்போது அந்த உணவகத்திலிருந்த பலான தொழில் செய்த மூன்று பெண்களை கைது செய்தார்கள் .
அதன் பிறகு அவர்களோடு நிஷா என்ற 30 வயதான பெண்ணையும் கைது செய்தார்கள் .இந்த வழக்கு தொடர்பாக இந்த விபச்சார மோசடி நடத்தி வரும் பெண் மற்றும் மேலும் அவரின் தோழி மீது காவல்துறையினர் குற்றத்தை பதிவு செய்துள்ளனர்.இந்த விபச்சார மோசடியில் அப்போது எந்த வாடிக்கையாளரும் இல்லாததால் யாரும் சிக்கவில்லை .மேலும் போலீசார் அந்த சாலையில் ஹோட்டல் போர்வையில் வேறு ஏதாவது இடங்களில் இப்படி இந்த விபச்சார மோசடி நடக்கிறதா என்று சோதனை நடத்தி வந்தார்கள் .

வெளியே சாப்பாட்டு கடை -உள்ளே பலான தொழில் -நெடுஞ்சாலையில் நடந்த மோசடி.