திடீரென அதிகரித்த கொரோனா பலி எண்ணிகை; மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?!

 

திடீரென அதிகரித்த கொரோனா பலி எண்ணிகை; மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் ஓயவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை உருவெடுக்கக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை பாதிப்பு குறைவது போல குறைந்து மூன்றாவது அலை உருவெடுக்கும் என்றும் கணித்துள்ளனர். அது போலவே, பாதிப்பு குறைந்து திடீரென அதிகரிப்பதால் மூன்றாவது அலை உருவாகிவிட்டதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

திடீரென அதிகரித்த கொரோனா பலி எண்ணிகை; மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் 431 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 38,303 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 3,42,923 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 25 ஆயிரமாக இருந்தது. நேற்று 27 ஆயிரமாக அதிகரித்தது. இன்று 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதே போல, 300க்கு கீழ் இருந்த கொரோனா மரணங்களும் 431ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.